Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

ஆத்தூரில் பரபரப்பு: பள்ளிக்கு காலதாமதமாக வந்த 2 மாணவர்கள் மீது தாக்குதல் விடுதி வார்டன் மீது போலீசில் புகார்


ஆத்தூரில் பள்ளிக்கு காலதாமதமாக வந்த 2 மாணவர்களை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியதாக விடுதி வார்டன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை மலைகிராமத்தின் பக்கமுள்ளது ஆழரிப்பட்டி. இந்த மலைகிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் தினேஷ் (வயது 14). இதே கிராமத்தை சேர்ந்த துரைசாமியின் மகன் அருள்குமார் (12).

ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தினேஷ் 9–ம் வகுப்பும், அருள்குமார் 6–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக மாணவர்கள் 2 பேரும் இதே பள்ளி விடுதியில் தங்கி உள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் இருந்து மாணவர்கள் 2 பேரும் காலதாமதமாக பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் காலை நடக்கும் இறை வணக்கத்துக்கு செல்லாமல், 2 பேரும் நேரடியாக வகுப்பறைக்கு சென்று விட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் விடுதி வார்டன், மாணவர்கள் 2 பேரையும் அழைத்து பள்ளிக்கு இனிமேல் காலதாமதமாக வருவீர்களா? என்று கேட்டு பிளாஸ்டிக் குழாயால், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் தினேஷ், அருள்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
இதற்கிடையே, மாணவர்களை பார்க்க பெற்றோர் காலையில் பள்ளிக்கு வந்தனர். அப்போது 2 மாணவர்களும் அங்கு அழுது கொண்டு இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறினார்கள்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பெற்றோர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்கள், பள்ளிக்கு காலதாமதமாக வந்த தங்களை விடுதி வார்டன் பிளாஸ்டிக் குழாயால் தாக்கியதாக தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கு தாமதமாக வந்த 2 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.