Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

அ.தி.மு.கவில் 15 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஜெயலலிதா அதிரடி உத்தரவு


தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மாவட்டச் செய லாளர்கள் 15 பேர்களை மாற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதில் நத்தம் விசுவநாதன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வி.பி.கலை ராஜன், பாலகங்காவுக்கு மீண்டும்  மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட் டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறி இருப்பதாவது:---

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன்  இன்றுமுதல் நியமிக்கப் படுகிறார்.
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.சீனிவாசன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
வடசென்னை தெற்கு மாவட்ட  செயலாளர் பொறுப்பில் முன்னாள் வாரிய தலைவர் நா.பால கங்கா இன்றுமுதல்  நியமிக் கப்படுகிறார்.

காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் திருக்கழுக் குன்றம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆறுமுகம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.ராமு (இவர் ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்), வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பாலசுந்தரம் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. என்.ஜி. பார்த்திபனும், வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் சுமைதாங்கி சி.ஏழுமலையும், வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் வி.பாலசுந்தரமும் நியமிக்கப் படுகிறார்கள்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட  செயலாளர் பொறுப்பில் இருக்கும் முக்கூர் என்.சுப்பிரமணியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தூசி கே. மோகன் நியமிக்கப்படுகிறார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கதிர் தண்டபாணி விடுவிக்கப் பட்டு அப்பொறுப்பிற்கு உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. இரா.குமரகுருவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பா.அய்யம்பெருமாள் விடுவிக்கப்பட்டு, அப்பொறுப்பிற்கு கதிர் தண்டபாணி நியமிக்கப் படுகிறார்கள்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளார் பொறுப்பில் பா.அய்யம் பெருமாள் நியமிக்கப் படுகிறார்.

சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் மாவட்ட ஜெ.ஜெயலலலிதா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங் கடாசலம் நியமிக்கப்படு கிறார்.

ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எல்.ஏ. வி.பி.சுப்பிரமணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ. கே.பி. ராமலிங்கம் நியமிக்கப் படுகிறார்.ஈரோடு பு-றநகர் மாவட்டக் செயலாளர் பொறுப்பில் இருக்கும்  எம்.எல்.ஏ.தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுற்றுச் சூழல் துறை அமைச்சர்  கே.சி.கருப்பணன் நியமிக்கப் படுகிறார்.

கரூர் மாவட்ட செய லாளர் பொறுப்பில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நியமிக்கப்படுகிறார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் நத்தம் விசுவ நாதன், நத்தம் சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என். கண்ணன் ஆகியோரும் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வி.மருதராஜ் நியமிக்கப்படுகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.தர்மர் விடுவிக் கப்பட்டு, அப்பொறுப்பிற்கு கழக மருத்துவ அணி துணை செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான டாக்டர் எம்.மணிகண்டன் நியமிக்கப் படுகிறார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.பி. எஸ்.முத்துகருப்பன் விடுவிக்கப்பட்டு அப்பொறுப்பிற்கு பாப்புலர் வி.முத்தையா நியமிக்கப் படுகிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஹரிஹர சிவசங்கர் அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட செய லாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எல்.ஏ. ஆர். முருகையா பாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான பி.நாராயண பெருமாள் நியமிக்கப் படுகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.தளவாய் சுந்தரம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தளவாய்சுந்தரத்திற்கு பதிலாக, மாவட்ட வழக் கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், எம்.பி. யுமான  ஏ.விஜயகுமார் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.