Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

நெகிழ்ச்சி வீடியோ: புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்


அமெரிக்காவின் ஆர்லந்தோ இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இப்தார் நிகழ்ச்சியின்போது சிறப்பு தொழுகை நடத்திய நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய சித்திக் மட்டின் என்பவரின் மகனான ஒமர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதலை நடத்தினாரா? என்ற கோணத்தில் அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் உலகெங்கும் வாழும் மக்களின் மனங்களின் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள நிலையில் பல முக்கிய தலைவர்கள் இச்சம்பவத்துக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய நியூயார்க் நகரில் உள்ள பூங்காவில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மாலைநேர இப்தார் நிகழ்ச்சியின்போது சிறப்பு தொழுகை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

‘ஹப்பிங்டன் போஸ்ட்’ (The Huffington Post) என்ற நாளிதழின் இணையத்தில் வெளியாகியுள்ள இந்த நெகிழ்ச்சி வீடியோவை இரண்டே மணிநேரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்..,



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.