Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து


சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை இளம்பெண் சுவாதி கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். பலர் சினிமா காட்சிகளை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன என்று ஒருவர் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் சுவாதி மரணத்துக்கு பிறகாவது இது போன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கருத்து பதிவு செய்துள்ளார்.

இதனை நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமிராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுஉள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

இது போன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் சொல்லித்தரவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.