குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை கே.கே.நகரில் 290 கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னை மாநகரில் காலடி எடுத்து வைக்கும் பெரும்பாலானோர், இங்கேயே நிரந்தரமாக வசிக்க தொடங்கி விடுகிறார்கள்.
தங்களுக்கு பிடித்தமான ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு, சென்னையை சொர்க்கபுரியாகவே நினைத்து வாழ்பவர்களும் உண்டு. இதுபோன்றவர்கள் சொந்த ஊருக்கு சென்றால் ‘‘ஊர்ல போய் 2 நாளைக்கி மேல இருக்க முடியல’’ என்பார்கள்.
இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சாதி, மத, வேறுபாடின்றி பலதரப்பட்டவர்களும் சென்னையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற ஒரு சூழலில் வெளிமாநிலங்களில் இருந்தும் வேலைக்காக இளைஞர்கள் பலர் சென்னையில் குவியத் தொடங்கி உள்ளனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது சென்னையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் எல்லா இடங்களிலுமே பரவிக் கிடக்கிறார்கள். சென்னையில் இவர்கள் செய்யாத தொழிலே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
இப்படி வேலைக்காக வரும் வெளி மாநிலத்தவர்கள் நமக்கே வேட்டு வைக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரில் இருந்து வந்த வங்கி கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை காட்டினர். போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதும், பின்னர் அக்கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் பின்னர் வடமாநில குற்றவாளிகளின் ஆட்டம் குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் பாபுசிங் என்ற தொழில் அதிபர் வடமாநில கூலிப்படையினரால், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும், சென்னை தி.நகரில் தொழில் அதிபர் வீட்டில் வடமாநில கொள்ளை கும்பல் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்த சம்பவமும் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெரியமேட்டில், நிதி நிறுவன அதிபர் பரஸ்மால், ராஜமங்கலத்தில் டாஸ்மாக் காவலாளி ஜெயராமன், கோடம்பாக்கத்தில் வக்கீல் முருகன் கொலை என தொடர்ச்சியாக சென்னையில் நடந்த கொலை சம்பவங்களும், அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தின.
இக்கொலை சம்பவங்கள் அனைத்திலும் போலீசுக்கு துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராக்களே பெரிய அளவில் உதவி செய்தன. கொலையாளிகளும் பிடிபட்டார்கள். இதற்கு முன்னரும், பல்வேறு வழக்குகளில் கேமராக்களே போலீசுக்கு பேருதவி புரிந்துள்ளன. இப்படி கண்காணிப்பு கேமராக்கள் வழக்கு விசாரணையின் போது முக்கிய அங்கமாகவே மாறிப் போய் விடுகின்றன.
அதே நேரத்தில் சென்னையில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு, வங்கிகளின் முன்னால் ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன. உயிரை பணயம் வைத்து மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், அதனால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவதும் அவ்வப்போது நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்களின் போது போலீசார் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்னர் எல்லாம் முடிந்து போகிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், இதுபோன்ற நேரங்களில் போலீசுக்கு பெரிதும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தின.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டார். சென்னை மாநகரை கேமரா நகரமாக மாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள், நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் கட்டாயம் கேமராக்களை பொறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை கே.கே.நகரில் 290 இடங்களில் நவீன கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கே.கே.நகர் வன்னியர் தெரு, ஆற்காடு ரோடு, அசோக் பில்லர் பகுதி, 100 அடி ரோடு மற்றும் அனைத்து குடியிருப்புகளிலும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தென் சென்னை இணை கமிஷனர் அன்பு, தி.நகர் துணை கமிஷனர் சரவணன் ஆகியோரது மேற்பார்வையில், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், இப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதன் மூலம் போலீஸ் நிலையத்தில் இருந்தபடியே கே.கே.நகர் பகுதி முழுவதையுமே போலீசாரால் கண்காணிக்க முடிகிறது. ஏதாவது ஒருபகுதியில் பிரச்சனை என்றால், போலீசார் அங்கு உடனடியாக விரைந்து செல்கிறார்கள்.
ஒரு இடத்தில் செயின் பறித்துச் செல்லும் குற்றவாளி எந்தவழியாக தப்புவான் என்பதையும் போலீசாரால் தெரிந்து கொள்ள முடிகிறது. கே.கே.நகர் பகுதி முழுவதுமே போலீசாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு குற்றவாளிகள் தப்பினால் எப்படியும் போலீசிடம் மாட்டிக் கொள்வார்கள். இதுபோன்ற ஒரு நிலையை சென்னை மாநகரம் முழுவதும் ஏற்படுத்திவிட்டால் போதும், குற்றங்கள் வெகுவாக குறைந்து விடும். அதற்கான பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை போலீசாரின் இந்த கேமரா பார்வையில் இருந்து இனி கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் தப்பவே முடியாது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.