Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் பாரதீயஜனதா பிரமுகர் கைது


குஜராத் மாநிலம் காந்தி நகரை சேர்ந்தவர் அசோக் மக்வானா (வயது 41). இவர் உள்ளூர் பா.ஜனதா தலைவராக உள்ளார். அசோக் மக்வானா கோவாவில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்தார். நள்ளிரவு அந்த விமானம் புறப்பட்டு வந்தது.

அந்த விமானத்தில் அகமதாபாத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பயணம் செய்தார். அவர் அசோக் மக்வானா பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அந்த சிறுமியிடம் அசோக்மக்வானா சில்மிஷத்தில்  ஈடுபட்டுள்ளார்.

விமானம் தரை இறங்கியதும் வெளியே வந்த சிறுமி தன்னை அழைத்து செல்ல வந்து இருந்த பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

குறும்பு செய்தவர் யார்? என்பது முதலில் அவர்களுக்கு தெரியவில்லை. இது பற்றி விமான பயணிகள் பட்டியலை சரி பார்த்த போது அந்த இருக்கையில் அசோக் மக்வானா இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர் மீது செக்ஸ் தொல்லை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.