ஜப்பானில் 96 வயது முதியவர் பட்டம் பெற்று உலகிலேயே மிக அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பகுதியை சேர்ந்தவர் ஷிகிமி ஹிராடா. கடந்த 1991.ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 96 வயது ஆகிறது. படிப்பின் மீது கொண்ட தீராத காதலால் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் செராமிக் பிரிவில் சேர்ந்தார். 11 ஆண்டுகள் தொடர்ந்து படித்தார்.
அவரது அயராத கடின உழைப்பால் கடந்த ஆண்டு அவர் தனது படிப்பை முடித்தார். எனவே அவருக்கு கியோட்டோ பல்கலைக்கழகம் சமீபத்தில் பட்டம் வழங்கியது.
ஹிராடா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் கடற்படையில் பணிபுரிந்தார். அவருக்கு பேரக் குழந்தைகளும், 4 கொள்ளு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
பட்டம் பெற்றது குறித்து அவர் கூறும் போது 100 வயது வரை வாழ்வதே எனது லட்சியம். நான் உடல் தகுதியுடன் இருந்தால் முதுகலை பட்டம் கூட பெறுவேன் என்றார்.
பட்டம் பெற்றதன் மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் பட்டம் பெற்ற நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.