Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஆப்ஸ்' வடிவமைப்பாளர் 9 வயது சிறுமி!


புத்தகத்தை சுமந்து கொண்டு பள்ளி செல்லும் வயது சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் என்றாலும் உண்மை அதுதான். அன்விதா விஜய்,  ஒன்பது வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தச் சிறுமி,  ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.




ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வருடத்திற்கான செயலி வடிவமைப்பாளர் கருத்தரங்கான WWDC 2016,  சான்பிரான்சிஸ்கோவில்  நடைபெற்றது. அதில் மிக வித்தியாசமான நிகழ்வு என்னவென்றால் சிறு வயதான அன்விதா விஜய் கலந்து கொண்டு சபையையே வியப்பில் ஆழ்த்தியதுதான். இந்த வருட தொழில் கருத்தரங்கில் இது ஒரு மிகப்பெரிய கருத்தரங்கு. மொத்தம் 350 பேர் கலந்துகொண்ட இதில்,  120 பேர் மாணவர்கள். அதிலும் 18 வயது நிரம்பியவர்கள். இவர்களில் மிகவும் சிறுவயதில் செயலி வடிவமைப்பாளராகி சாதனை படைத்துள்ளார் அன்விதா விஜய். ஐ-போன் மற்றும் ஐ-பேடிற்கான செயலி வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அன்விதா செயலி வடிவமைப்பாளராவதற்காக தனியாக எந்த ஒரு கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ செல்லவில்லை. யூடியூப்  மற்றும் இன்டெர்நெட்டிலேயே இதனை கற்றறிந்துள்ளார்.

இது பற்றி அன்விதா விஜயிடம் கேட்ட போது,"ஒரு சிறிய பொறி என் மனதில் தட்டியதால் இது போன்று செயலி வடிவமைப்பில் ஆர்வம் எனக்கு வந்தது. இதற்காக நான் கடினமாக உழைத்தேன். முதலில் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் அது,  சவாலை சந்திக்கிற ஒரு மகிழ்வை எனக்கு அளித்தது. செயலி கட்டமைப்பில் பல உள்கூறுகள் உள்ளன. அதில் ப்ரோட்டோடைப்பிங்,வடிவம், வயர் ஃப்ரேமிங், பயனர் இன்டர்பேஸ் வடிவம்,கோடிங் மற்றும் டெஸ்டிங் ஆகியவை அடங்கும்.

எவ்வாறு புரோகிராமிங் செய்வது என்பதை முற்றிலும் இண்டர்நெட்டிலேயே கற்றுக்கொண்டேன். என்னுடைய இளைய சகோதரியின் செய்கையால் ஈர்க்கப்பட்டு  நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. இதனால் குழந்தைகளுக்கான பிரத்யேக செயலிகள் வடிவமைக்கப்பட்டன.  இதில் 100 வகையான ஒலிகள் மற்றும் ஒளிரும் அட்டைகள் உள்ளன. இவை பல வகையான விலங்குகள் பெயர் மற்றும் அவற்றின் ஒலிகளை அறிய முடியும்."என்றார்.

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் நிறைய செயலிகளை இவர் வடிவமைத்துள்ளார். உலகம் முழுதும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி, சின்னஞ்சிறு வயதில் இவருக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற கருத்தரங்கை காட்டிலும் இம்முறை கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் 22% பெண்கள் மொத்தமாக கலந்து கொண்டனர். இதில் அமெரிக்கர்கள் மற்றும் ஆசிய ஆண்கள்தான் அதிகம். அந்த நிறுவனத்தின் வைஸ் பிரசிடண்ட் ஸகாட் லில்லி,  கூடிய விரைவில் உலக அளவில் இந்த கருத்தரங்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இவரை போன்று சாதிப்பதில் ஆர்வமாக  உள்ள இளைய தலைமுறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.