Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

ராஜஸ்தான்: பத்தாம் வகுப்பு தேர்வில் 47 முறை கோட்டைவிட்டும் முயற்சியில் மனம்தளராத 82 வயது கஜினி முகமது


1951-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தேர்ச்சிபெற முடியாமல் போனதால் கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து தனித்தேர்வு எழுதி, 82 வயதுவரை கல்யாணம் ஆகாத பிரமச்சாரியாக வாழ்ந்துவரும் ஒருவர் இந்த ஆண்டு தேர்விலும் தோல்வியை தழுவிய தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கோஹாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண்(82). உள்ளூர் மக்களால் ஷியோஜிராம் என்றும் பப்பு என்றும் ஆசையாய் அழைக்கப்படும் இவர் ஒருவைராக்கியத்துடன் கல்யாணம் ஆகாத பிரமச்சாரியாக உள்ளூர் கோயிலில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1951-ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் கணக்குப் பாடம் வடிவில் விதி விளையாடி விட்டதால் ‘இனி பத்தாம் வகுப்பு தேர்வில் பாஸ் ஆனால்தான் நமக்கு கல்யாணம், காட்சி எல்லாம்’ என்ற சபதத்தில் தனது வாலிபத்தை தொலைத்துவிட்ட ஷியோஜிராம், எப்படியாவது மீண்டும் பரீட்சை எழுதி பாஸாகி விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.


இந்தியாவின் செல்வத்தை கவர்ந்துச் செல்ல கஜினி முகமது 17 முறை படையெடுத்து வந்ததைப்போல், கடந்த 1969-ம் ஆண்டில் தொடங்கி இதுவரை 47 முறை தனித்தேர்வு எழுதி, இந்த ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்துள்ளார். சாகும்வரை எனது சபதத்தை நிறைவேற்ற பரீட்சை எழுதிக் கொண்டே இருப்பேன் என கூறிவரும் இவர் தற்போது கண்பார்வை மங்கிய நிலையில் இருப்பதால் சரியாக படிக்க முடியாமல் இந்த ஆண்டு தேர்வில் பல பாடங்களில் ‘முட்டை’ வாங்கியுள்ளார்.

இருப்பினும், பாஸாகி விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசை மட்டும் இந்த வயதிலும் அவரது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையுடன் கிராமத்து கோயிலில் பிரம்மச்சாரியாக ‘ஒண்டுக்குடித்தனம்’ நடத்திவரும் ஷியோஜிராம், அடுத்த ஆண்டு தேர்விலாவது பாஸாகி, சம்சாரியாக மாற வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.