Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2016

கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் பயங்கர சாலை விபத்து: 14 பேர் பலி-பலர் உயிர் ஊசல்


கிருஷ்ணகிரி அருகே இன்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, லாரி மற்றும் ஒரு கார் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் பலர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் அவர்களுக்கு உதவியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் 14 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த லாரியின் டயர் பஞ்சரானதால் தாறுமாறாக ஓடி எதிரே வந்த பஸ் மற்றும் கார் மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.