ஒடிசாவில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தைக்கு வயிற்றை சுற்றி 14 இடங்களில் பாட்டி இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.ஒடிசா மாநிலத்தில் பதிபல்லி கிராமத்தை சேர்ந்த சுதானு, ஆர்த்தி ஆகியோருக்கு குழந்தை பிறந்து எட்டு நாட்களே ஆன நிலையில் மஞ்சல் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. வயிறு வீங்கிய நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் சிகிச்சையில் திருப்தி அடையாத குழந்தையின் பாட்டி மஞ்சல் காமாலை நோயை போக்க குழந்தை வயிற்றை சுற்றி இரும்பு கம்பியால் 14 இடங்களில் சூடு வைத்துள்ளார். தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறது.
இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறியதாவது:- சூடு வைத்ததால் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பழங்குடியினர்கள் வாழும் பகுதியில் இது போன்று குழந்தைகளுக்கு தழும்பு இடுவது வழக்கம், என்றார். மேலும் இந்த ஆண்டு இதுபோல 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.