அன்றாடம் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலை வரிசையாக உயர்ந்து கொண்டே வருகிறது. சில பொருட்கள் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் அதை கட்டாயம் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில் இருக்கிறோம். மேலும், சில பொருட்களை தவிர்க்கலாம். ஆனால் பருப்பு, அரிசி போன்ற பொருட்களை தவிர்க்க முடியாது. எனவே இந்த விலைவாசி உயர்வை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
1. விலைவாசி உயர்வு என்பது எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். பொருட்கள்தான் மாறும். எனவே விலை அதிகம் உள்ள பொருட்கள் வாங்கும் அளவை முடிந்தவரை குறைப்பது நல்லது. பருப்பு விலை அதிகமாக இருக்கும் சமயங்களில் பருப்பு இல்லாத சமையலை தேர்வு செய்வது நல்லது. அதேபோல விலை குறைவாக உள்ள காய்கறிகளை வாங்கலாம்.
2. முடிந்தவரை செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி ஓட்டல், ஷாப்பிங், சினிமா போன்ற செலவுகளை முடிந்தவரை குறைத்தாலே, கணிசமான தொகை மிச்சமாகும். மிச்சமாகும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.
3. எப்போதும் இதுபோன்ற செலவுகளை சமாளிக்க, தனியாக ஒரு சேமிப்பு இருப்பது நல்லது. அதாவது ஆர்டி, ரிஸ்க் குறைந்த கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றில் சேமித்து வைக்கலாம்.
4. மின்சாரக் கட்டணம், பெட்ரோல் செலவு ஆகியவற்றை முடிந்தவரை குறைக்கலாம். அதாவது கட்டாயம் தேவையான நேரங்களில் மட்டும் ஏசி பயன்படுத்தலாம். தேவையில்லாமல் வீட்டில் லைட், ஃபேன் ஓடுவதை தவிர்க்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை பொது போக்குவரத்து அல்லது கணவன், மனைவி சேர்ந்து ஒரே வாகனத்தில் அலுவலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். அதேபோல டி.வி, செல்போன் சார்ஜ் போடும் ஸ்சுவிட் ஆகியவைற்றை ஆஃப் பண்ண வேண்டும். இல்லையெனில் அதிலும் மின்சாரம் தேவையில்லாமல் செலவாகும்.

5. வீட்டில் வீணாகும் பொருட்கள் என்னென்ன என்பதை கவனிக்க வேண்டும். அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டும். அதாவது இரண்டு நபர்கள் மட்டும்தான் எனில், அவர்களுக்கு போதுமான அளவு சாதம் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மீதமாகும் சாதத்தை பல வீடுகளில் குப்பையில் போட்டு விடுகிறார்கள். அதேபோல அனைத்து உணவு பொருட்களையும் தேவைக்கும் மட்டும் சமைப்பது நல்லது.
6. பொருட்கள் வாங்குவதற்கு முன் என்னென்ன பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு லிஸ்ட் போட்டுக் கொள்வது நல்லது. இதன் மூலமாக தேவையில்லாமல் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்குவது குறையும்.
7. தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை காசு கொடுத்துதான் வாங்குகிறோம். அதனால் காய்கறி, அரிசி கழுவுவதற்கு போர் வாட்டரை பயன்படுத்துவது நல்லது.
மேற்கூறிய வழிகளில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் போது, செலவு வெகுவாக குறையும். இதனால் செலவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். எந்தவிதமான விலைவாசி உயர்வையும் எளிதாக சமாளிக்க முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.