Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

நாடு முழுவதும் மறைமுக வரி வசூல் 7.09 லட்சம் கோடி!


 நாடு முழுவதும், கடந்த நிதியாண்டில் சுங்கம், கலால், சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் 7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது என்று மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர் நஜிப் ஷா தெரிவித்தார்.

சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான ஆவணப் பரிசோதனையில் ரேடியோ அதிர்வெண்கள் மூலம் கண்டறியும் சாதன முறை (RFID-Radio Frequency Identified Device) நேற்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இப்புதிய திட்டத்தை மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் (CBEC-Central Board of Excise and Customs) தலைவர் நஜீப் ஷா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ், சுங்கத்துறை முதன்மை ஆணையர் எஸ்.கே.தாஸ், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் கிரிஷ்ணதாஸ், சிவகுமார், சுங்க இல்ல முகவர் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி, செயலாளர் நடராஜன், வர்த்தக சங்க நிர்வாகிகள் சோழநாச்சியார், ஜெ.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நஜீப் ஷா கூறும்போது, ''சட்டங்களை அமலாக்குவதில் இதுபோன்ற புதிய நடைமுறைகளை நிச்சயமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படும். மேலும், இப்புதிய நடைமுறை மூலம் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் அலுவலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். இப்புதிய நடைமுறையை அனைத்து துறைமுகங்கள் மற்றும் முனையங்களிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

மேலும் சுங்கத்துறையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் அனைத்து ஏஜென்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்காக பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதன் தலைமை ஏஜென்சியாக சுங்கத்துறை விளங்குகிறது. இருப்பினும் தொடக்கத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

தற்போது 99 சதவீத ஆவணப் பரிசோதனைகள் மின்னணு முறையில் செயல்படுத்தப்படுகிறது. எந்த ஒரு துறையிலும் அடிமட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது. அப்போதுதான் உயர் அதிகாரிகள் சிறந்த கொள்கை முடிவு எடுக்க முடியும்.

நாடு முழுவதும் கலால், சுங்கம், சேவை வரிகள் (மறைமுக வரிகள்) மூலம் ரூ.7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மண்டலம் மூலம் 10 சதவீதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.