Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

சென்னையில் கார் கம்பெனி குடோனில் இருந்து 7 புதிய சொகுசு கார்கள் கொள்ளை


சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள  மணப் பாக்கத்தில் ஹூண்டாய் கார் கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. நேற்று இரவு வேளச்சேரி ராம்நகரை சேர்ந்த மனோ கரன் (55) என்ற காவலாளி பணியில் இருந்தார். நள்ளிரவில்  10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் வெளியில் இருந்து கற்களை  தூக்கி உள்ளே போட்டனர். சத்தம் கேட்டு  மனோகரன், வாசல் கதவை  திறந்து கொண்டு வெளியில் வந்தார்.
உடனே ஒருவன் சத்தம் போடக்கூடாது எனக்கூறி அவரது  முதுகில் கத்தியால் வெட்டினான்.  இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  பின்னர், அனைவரும்  சேர்ந்து காவலாளி மனோகரனை அங்கு நிறுத்தப்பட்டிருந்த புதிய கார் ஒன்றில் தூக்கி போட்டனர். பின்னர் ஒரு கயிற்றால் காருக் குள்ளேயே கட்டிப் போட்ட னர்.

நேற்று இரவு இந்த குடோனில் மொத்தம் 65 புதிய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 7 கார்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத் ததும் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காவலாளி மனோகரன் அளித்த புகாரின்பேரில்  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கார் திருட்டு கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே கடத்தி செல்லப்பட்ட 7 கார்களில் 5 கார்கள் இருக்கும் இடம் தெரிந்தது. வளசரவாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் 5 கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதி  2 கார்களுடனும் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். புதிய கார்களின்  சாவி காரிலேயே  இருந்ததும் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.