Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

அபராத தொகை ரூ.4.75 கோடியை செலுத்தியது வாழும் கலை அமைப்பு


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ந் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது. அந்த விழாவையட்டி, யமுனை வெள்ள சமவெளி பகுதிகளை சேதப்படுத்தியதாக வாழும் கலை அறக்கட்டளைக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதை விசாரித்த தீர்ப்பாயம், சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி செலுத்துமாறு உத்தரவிட்டது. முதல்கட்டமாக, ரூ.25 லட்சம் செலுத்திய வாழும் கலை அறக்கட்டளை, மீதி ரூ.4.75 கோடியை வங்கி உத்தரவாதமாக வழங்குவதாக தெரிவித்தது. 

ஆனால், வாழும் கலை அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சனிக்கிழமைக்குள் செலுத்த வேண்டும் என்று  கண்டிப்புடன் தெரிவித்தது. இந்த நிலையில், ஜூன் 3 ஆம் தேதி 4.75 கோடி ரூபாய்க்கான வரைவோலயை டெல்லி  மாநகர வளர்ச்சி ஆணையத்திடம் வாழும் கலை அமைப்பு வழங்கியதாக டெல்லி மாநரக வளர்ச்சி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.


Thanks To: DAILY THANTHI 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.