June 22, 2016
சென்னை துறைமுகத்தில் 4,562 கன்டெய்னர்களை ஏற்றி புதிய சாதனை
சென்னை துறைமுகத்தில் ஒரு சரக்கு கப்பலில் 26 மணி நேரத்தில் 4,562 கன்டெய்னர்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் டிபி வேர்ல்டு என்ற சரக்கு முனையம் உள்ளது. இங்கிருந்து கப்பல்கள் மூலம் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சரக்கு முனையத்தில் இருந்து எம்.வி.மெயர்ஸ்க் செனாங் என்ற சரக்குக் கப்பலில் 4,562 சரக்கு கன்டெய்னர்கள் கடந்த 26 மணி நேரத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
26 மணி நேரத்துக்குள் இவ்வளவு அதிகமாக சரக்கு கன்டெய்னர்கள் கப்பலில் ஏற்றப்பட்டது இதுதான் முதல் முறை. இந்த சரக்குகள் சிங்கப்பூர், பூசன், தான்ஜுங், பெலபாஸ், கிங்டா, ஜிங்சாங், ஷாங்காய், நான்ஷா ஆகிய துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் 4,562 கன்டெய்னர்களை ஏற்றி புதிய சாதனை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.