பெங்களூருவில் உள்ள ஒரு உணவு விடுதி பாரில் இசைக்கு தகுந்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்து நடனம் ஆட வைத்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பெங்களூர் போலீசார் கூறுகையில், ''நகரின் மையப்பகுதியில் பீல்டு மார்ஷல் கே.எம் கரியப்பா சாலையில் உள்ளது ஒரு உணவு விடுதி. இதில் பார் உள்ளது. இந்த பாரில் இசைக்கு ஏற்ப நடனம் ஆடும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஆடுவதும், ஆவர்கள் மீது பணத்தை வீசுவதும் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நாங்கள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டோம்.
அப்போது, அந்த பாரில் பெண்கள் மீது வீசப்பட்டு, தரையில் கிடந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பாரில் நடனம் ஆடிக் கொண்டு இருந்த நேபாளம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 77 பெண்கள் மீட்கப்பட்டனர். வறுமையில் இருக்கும் பெண்களை வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி அழைத்து வந்து பார்களில் இதுபோன்ற நடனம் ஆட வைக்கின்றனர்.
இந்த பாருக்கு சொந்தமான கங்காஷெட்டி இவரது கூட்டாளிகள் ஓம்பிரகாஷ் யாதவ், வனிதா, சாந்தி ஸ்வரூப், தனேந்திரா, சையத் சமீர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்'' என்றனர்.
இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.