துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 36 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
துருக்கியின் மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 36 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக அந்நாட்டு பிரதமர் பினால்டி இல்டிரிம் தெரிவித்தார். மேலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பலியாயினர் எனவும், ஒரு பயங்கரவாதி தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
அடாடர்க் விமான நிலையம் பிஸியான விமான நிலையங்களின் வரிசையில் உலகளவில் 11 வது இடமும், ஐரோப்பாவில் 3வது இடமும் வகிக்கிறது. சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.