ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ பின்னி பன்சால், பெங்களுரில் உள்ள முக்கிய பகுதியான கோரமங்களாவில், 32 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்தியாவில் இருக்கும் முக்கிய கோடீஸ்வரர்களுக்கு அந்தப் பகுதியில் வீடு இருக்கிறது. அதாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர்களான நந்தன் நிலகேணி, கிர்ஸ் கோபாலகிருஷணன் உள்ளிட்ட பல முன்னணி தொழிலதிபர்கள் இங்கு ஏற்கனவே வீடு வாங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது புதிய வீடு வாங்கி உள்ள பென்னி பன்சால், சச்சின் பன்சாலுடன் இணைந்து 9 வருடங்களுக்கு முன் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை துவங்கினார். தற்போது, இந்தியாவில் உள்ள முக்கியமான இ-கமார்ஸ் நிறுவனங்களில் ஃப்ளிப்கார்ட் முக்கிய இடத்தில் உள்ளது. பின்னியின் வயது 32 ஆகும். இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு விலை மதிப்புள்ள வீட்டை வாங்கியுள்ளாதால் பின்னியின் மீது பல தொழிலதிபர்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்காக இரண்டு தனியார் வங்கியில் பென்னி கடன் வாங்கியுள்ளார். சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. சச்சின் பன்சாலும் பின்னியின் வீட்டுக்கு அருகில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அது பின்னியின் வீட்டை விட சிறியது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு தற்போது 10 பில்லியன் டாலர் ஆகும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.