Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

ரூ.300 லஞ்சம் தராததால் பரிதாபம்:அரசு மருத்துவமனையில் வாலிபர் சாவு


மதுரை அரசு மருத்துவமனையில், 300 ரூபாய் லஞ்சம் தராததால், வலிப்பு நோய் பாதித்த வாலிபர் உயிரிழந்தார்.மதுரை, புதுாரைச் சேர்ந்த கணபதி மகன் ராஜேந்திர பிரசாத், 18, வலிப்பு நோயால் அவதியுற்றார். மே, 2ம் தேதி நோய் தீவிரம் அடைந்ததால், அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கணபதி கொண்டு சென்றார்.
அனுமதி சீட்டு:அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவில் இருந்த டாக்டர், அனுமதி சீட்டு எழுதி, உள்நோயாளிகள் பிரிவுக்கு செல்லும் படி கூறினார். கணபதி, 20 நிமிடங்கள் காத்திருந்து, உள்நோயாளி அனுமதி சீட்டு வாங்கி-னார்.பின், ராஜேந்திர பிரசாத்தை, 'ஸ்டிரெச்சரில்' உள்நோயாளிகள் பிரிவுக்-கு கொண்டு செல்ல அங்கிருந்த ஊழியர், 300 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

பின்னர் நடந்தது குறித்து, கணபதி கூறியதாவது: லஞ்சம் தர மறுத்ததால், உள்நோயாளிகள் பிரிவு அனுமதி சீட்டுடன், 'ஸ்டிரெச்சர்' ஊழியர் தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அனுமதிசீட்டு பெற, 20நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வருத்தம் அளிக்கிறதுஉள்நோயாளிகள் பிரிவிற்கு கொண்டு சென்றபோது, ராஜேந்திர பிரசாத் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு வந்தவுடன் என் மகனுக்கு சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.'டீன்' வைரமுத்து ராஜு கூறுகையில், ''ராஜேந்திர பிரசாத் இறந்தது, டாக்டர்களின் கவனக்குறைவால் அல்ல. அவரது இறப்பு வருத்தம் அளிக்கிறது. 'ஸ்டிரெச்சர்' தள்ள மறுத்தவர் பாண்டி என தெரிகிறது. முன்பு தற்காலிக ஊழியராக பணி செய்தவர், தற்போது தரகராக உள்ளார். அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளோம். தவறு செய்தவர்கள் குறித்து புகார் அளிக்கலாம்,'' என்றார்.
கலெக்டர் வீரராகவ ராவ் கூறுகையில், ''லஞ்சம், தாமத சிகிச்சையால் ராஜேந்திர பிரசாத் இறந்தது குறித்து எந்த புகாரும் வரவில்லை; இருப்பினும், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.