Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை பூஜா மிஸ்ரா புகார்



நடிகை பூஜா மிஸ்ரா, வக்கீல், மாடல், வீடியோ ஜாக்கி , பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போன்ற பல துறைகளில் ஜொலிப்பவர். தனது கவர்ச்சிப் படங்களுடன் காலண்டர் ஒன்றை வெளியிட்டுக் கலக்கினார்.

பூஜா மிஸ்ரா அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி பேசப்படுபவர்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  பூஜா மிஸ்ரா  நடிகை சோனாக்‌ஷி சின்கா உள்பட 5 பேர் மீது தனக்கு எதிராக சதி செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.

பூஜா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

 பூஜா டிவி நிகழ்ச்சியை படமாக்க வந்த வீடியோக்காரர்கள் 3 பேர் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பூஜா அங்கிருந்த சில பொருட்களை உடைத்துள்ளார். உடைத்த பொருட்களுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.

மும்பையில் அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் ரகளை செய்துள்ளார். இதனால் அவரை குடியிருப்பு பகுதிக்குள் வரக் கூடாது என்று அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.