Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்


குஜராத் மாநிலத்தில் 3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

குண்டு குழந்தைகள்

குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள்.

4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.

கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்பதற்கு உள்ளாகவே 12 கிலோ எடையை சர்வசாதாரணமாக கடந்து விட்டனர். தற்போது உலகிலேயே அதிக குண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்ற சாதனைக்கும் உரியவர்களாகி விட்டனர்.

பலன் இல்லாத சிகிச்சை

ஒவ்வொரு மாதமும் இவர்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக தேவைப்படுவதால் நந்த்வனாவின் குடும்பம் வறுமையில் தள்ளாடத் தொடங்கியது.

இவர்களின் பசிப்பிணியை போக்கிட அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற தகவல் கடந்த ஆண்டு ஊடகங்களில் பரவியது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மூவருக்கும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.

சிகிச்சை முடிந்து சில மாதங்கள் வரை இவர்களின் உடல் கட்டுக் கோப்பாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மூவரும் மீண்டும் குண்டாகத் தொடங்கி விட்டனர். இதனால் நந்த்வனாவின் நிலைமை மறுபடியும் படுசிக்கலாகி விட்டது. குழந்தைகளின் உடல் எடையை குறைக்க சிறப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

சிறுநீரகத்தை விற்க முடிவு

குண்டு குழந்தைகள் குறித்து அவர் கூறும்போது, ‘‘இவர்களால் ஒரு நிமிடம் கூட பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது. குண்டாகிவிட்டதால் இவர்களால் நகரக் கூட முடியவில்லை. எனது மனைவிக்கு சமையல் அறையே வசிப்பறையாகிப் போய்விட்டது. இவர்கள் எடை அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. என் கண் முன்பே இவர்கள் சாவதை விரும்பவில்லை. எனவே, எனது சிறுநீரகத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’’ என்கிறார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.