ஐஐடி டெல்லியில் படித்து வரும், அக்ஷித் கோயல் , தீபக் பத் மற்றும் ஐஐடி பாம்பேவில் படிக்கும் உதய் குசுபதி ஆகிய மூன்று பேரும் இத்தாலிக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர். இந்த மூவரும் இத்தாலியில் உள்ள வடக்கு பகுதியான பிரஞ்ச்- இத்தாலி எல்லை நகரமான வெண்டிமிக்லியா சென்றனர்.
அப்போது, திடீரென அங்குள்ள போலீசாரால், வெண்டிமிக்லியா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். மூவரும் முறையான பாஸ்போர்ட் மற்றும் சென்கென் விசா வைத்திருந்தும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் உள்ள பாரி என்ற நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். திடீரென கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்திய தூதரகத்துக்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத்தாலி அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விவரம் கேட்டனர். அப்போது, மாணவர்கள் மூன்று பேரும் தவறாக கைது செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்திய தூதரகம் கடும் அதிருப்தி தெரிவித்தையடுத்து, மாணவர்கள் மூன்று பேரையும் இத்தாலி உடனடியாக விடுவித்தது.
பிரான்சில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்கள் திட்டமிட்டிருந்ததனர். இதனால், மாணவர்கள் பிரான்சு செல்வதற்கும் தேவையான ஏற்பாடுகளை இத்தாலி அதிகாரிகள் செய்தனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.