June 12, 2016
எல்லை வழியாக ஊடுருவிய போதை பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டு கொலை
பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 போதை மருந்து கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லை வழியாக பஞ்சாபில் ஊடுருவும் கும்பல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இவற்றை சப்ளை செய்து வருகிறது. இதற்காக சர்வதேச அளவில் நெட்வொர்க் அமைத்து, பாகிஸ்தான் சிம் கார்டுகள், ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பஞ்சாபில் போதை பொருள் கடத்தல் ஒரு மிகப் பெரிய மாபியா தொழிலாக வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக போதை பொருள் பழக்கத்திற்கும், போதை கடத்தல் கும்பல்களின் ஈர்ப்புக்கும் சிக்கி ஏராளமான சீக்கிய இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். இதன் காரணமாக இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பெரிய அளவில் சீர்குலைந்துப் போய் உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. தற்போது பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் பாஜ-அகாலிதள முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த ஜனவரியில் பஞ்சாபில் உள்ள பதன்கோட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு போதை மருந்து கடத்தல் விவகாரமும் விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு போதை மருந்து கடத்த முயன்ற 4 பேரை எல்லையில் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இவர்களிடம் இருந்து சர்வதேச மதிப்புள்ள கோடிக்கணக்கான ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் சிம் கார்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதற்கிடையில் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு பஞ்சாப் அரசில் உள்ள அமைச்சர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை குற்றம் சாட்டி வருகின்றன. 2017ம் ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பஞ்சாபில் போதை மருந்து விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பதன்கோட் தாக்குதலுக்கு பிறகு பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் இதையெல்லாம் மீறி எல்லையில் போதை மருந்து கடத்தல் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அண்மையில் பஞ்சாபில் பிரசாரம் செய்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், போதை மருந்து கடத்தலில் அமைச்சர் விக்ரம் சிங் மஜீதியாவுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் அவர் மீது இன்னும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதே போல் பஞ்சாபில் சுற்றுபயணம் செய்த ராகுல் காந்தியும், குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதை மருந்து கடத்தல் தடுக்கப்படும் என்றார்.
மேலும் வருகிற 13ம் தேதி ராகுல் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பஞ்சாபில் போதை பொருட்களால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து எடுக்கப்பட்ட உட்தா பஞ்சாப் படத்தை வெளியிட மாநில அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளையும் போட்டு வருகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம் பசில்கா என்ற இடத்தில் எல்லையில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவியிருப்பது தெரியவந்தது. அங்கு வந்த பாதுகாப்பு படையினரை நோக்கி கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து கடத்தல்காரர்களை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவ்ததில் இரண்டு கடத்தல் காரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவன் படுகாயமடைந்தான். சம்பவ இடத்தில் இருந்து கடத்தல்காரர்கள் வசம் இருந்த சர்வதேச மதிப்பில் பல லட்சம் மதிப்புள்ள 15 பாக்கெட் ஹெராயின் என்ற போதை பொருளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
மேலும் கடத்தல்காரர்கள் வசம் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். காயமடைந்த கடத்தல்காரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த கும்பலுடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? கடத்தல்காரர்கள் எங்கிருந்து எங்கு கொண்டு செல்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் குறித்து போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது உட்தா பஞ்சாப் திரைப்பட விவகாரம் பஞ்சாபில் பற்றி எரியும் வேளையில் இரண்டு போதை மருந்து கடத்தல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை வழியாக ஊடுருவிய போதை பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டு கொலை
Reviewed by மறத்தமிழன்
on
June 12, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.