மகாராஷ்டிராவில் 5 போர்ட்டர் பணியிடத்துக்காக எம்பில் முடித்த 5 பேர் மற்றும் 984 பட்டதாரிகள் உட்பட 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். கால்காசு உத்யோகம் பார்த்தாலும் கவர்ன்மென்ட் உத்தியோகம் பார்க்கணும்” என்பார்கள். வேலைகாலம் முழுவதும் பாதுகாப்பு, ஒய்வு பெற்றால் பென்சன், எந்த நேரத்தில் வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற அச்ச உணர்வு இன்றி வேலை செய்யலாம் போன்றவையே அரசாங்க வேலையை தேர்வு செய்வதற்கு முன்பெல்லாம் காரணமாக இருந்தன. ஆனால், இப்போது படித்து பட்டம் பெற்ற பின்னரும் வேலை கிடைக்காத காரணத்தால் கல்வித் தகுதிக்கு பொருந்தாதபோதிலும் அரசு வேலை என்பதால் அதனை ஏற்க சிலர் அல்ல பலர் தயாராகவே உள்ளனர். இதுபோன்றதொரு சம்பவம் தான் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் ஆகஸ்ட் மாதம் போர்ட்டர் பணியிடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்திருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு நான்காம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பட்டதாரிகள் கூட போர்ட்டர் பணியிடத்துக்கு விண்ணப்பித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ராஜேந்திர மங்ருல்கர் கூறுகையில், “5 போர்ட்டர் பணியிடத்துக்கு 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 5 பேர் எம்பில் முடித்தவர்கள். 9 பேர் முதுகலை டிப்ளமோ மற்றும் 109 பேர் டிப்ளமோ முடித்தவர்கள். 253 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள். மொத்தத்தில் 984 பட்டதாரிகள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர், பத்தாம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்கள் 177 பேர் என 2,424 பேர் போர்ட்டர் பணியிடத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.