Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

பார் அண்ட் ரெஸ்ட்டாரண்டுகளில் சோதனை 25க்கும் அதிகமான பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.



பெங்களூருவில் இருவேறு இடங்களில் தனியார் பார் அண்ட் ரெஸ்ட்டாரண்டுகளில் நடந்த சோதனையில் 25க்கும் அதிகமான பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.பெங்களூரு அசோக்நகர் பகுதியில் உள்ள தனியார் பார் அண்ட் ரெஸ்ட்டாரண்டுகளில் நேற்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்களை மீட்ட போலீசார் உரிமையாளர், கேசியர், ஊழியர்கள் ஆகியோரை கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று கப்பன் பார்க் போலீசார், பிரிக்கேடு சாலையில் உள்ள தனியார் பார் அண்ட் ரெஸ்ட்டாரண்டுகளில் சோதனை நடத்தினர். இதில் 20க்கும் அதிகமான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இருவேறு போலீசார் வழக்கு பதிந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.