மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டு பெண் போலீசை மானபங்கம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தகராறு
தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்(வயது28). இவரது நண்பர் கேரளாவை சேர்ந்த கிருஷ்ணா(25). இவர் மும்பையில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் 2 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு ஜூகு பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு அதற்கான பில்லை தருமாறு கேட்டனர். பில் ரூ.14 ஆயிரம் வந்து இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாசும், கிருஷ்ணாவும் பில் அதிகமாக போட்டு இருப்பதாக கூறி, மதுபான விடுதி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பெண் போலீஸ் மானபங்கம்
இது குறித்து தகவல் அறிந்த 2 போலீசார் மற்றும் ஒரு பெண் போலீஸ் அந்த மதுபான விடுதிக்கு வந்து, தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வந்து பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வர மறுத்து போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கிருஷ்ணாவும், ஸ்ரீனிவாசும் பெண் போலீசை மானபங்கம் செய்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இருவர் மீதும் ஜூகு போலீசார் மானபங்க வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.