June 26, 2016
ஓடும் ரயிலில் இருந்து 15 வயது சிறுவனை தள்ளிவிட்ட பரிசோதகர்: காரணம்?
பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் 15 சிறுவனை, பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சிறுவன் விசாகப்பட்டினத்தில் ரயில் ஏறி கட்டாக் வரை செல்ல முற்பட்டுள்ளான்.
பயணத்தின் போது பயணச்சீட்டு பரிசோதகர், சிறுவனிடம் பயணச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
சிறுவனிடம் பயணச்சீட்டு இல்லாததால் கோபமடைந்த பரிசோதகர் அவனை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த ரயில்வே பொலிசார், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போது சம்பவத்தின் போது ரயில் பணியாற்றி வந்த மூன்று பயணச்சீட்டு பரிசோதகர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
ஓடும் ரயிலில் இருந்து 15 வயது சிறுவனை தள்ளிவிட்ட பரிசோதகர்: காரணம்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.