Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்கள் முடக்கம்!



பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

ஐ.டி.பி.ஐ வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததாக வழக்கு தொடரப்பட்டது.

ஐ.டி.பி.ஐ வங்கியில் விதிமுறைகளை மீறி ரூ.900 கோடி கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் மொத்தமாக ரூ.7,000 கோடி கடன் பெற்று மல்லையா மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை விசாரணைக்காக நாடு அழைத்துவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.