Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

13 வயது சிறுமியை கற்பழித்த ஆட்டோடிரைவர் மதுவுக்கு இரட்டை ஆயுள்: கேரள கோர்ட்டு தீர்ப்பு


கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மது (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மது மீது மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த மது அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் இதேபோல மேலும் 4 சிறுமிகளையும் கற்பழித்தது தெரிய வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர செயல் காரணமாக மது ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை மஞ்சேரி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் மதுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் குழந்தைகளிடம் ஈவு இரக்கமற்ற முறையில் கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் வழங்குவதன் மூலம் தான் குற்றங்களை குறைக்க முடியும் என்று கூறி உள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.