112 சிலைகளை கடத்திய தீனதயாளன் போலீசில் சரணடைந்தார். சிலை கடத்தல் தொடர்பு குறித்து முழுமையான விசாரணை செய்ய தீனதயாளனை காவலில் எடுப்போம் என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச்சேர்ந்த தொழில் அதிபர் தீனதயாளன் தமிழ்நாட்டில் உள்ள பழமையான, அரிய சாமி சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து வந்ததை சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் பெங்களூரில் உள்ள தன் மகள் வீட்டுக்கு சென்றிருந்ததால் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.
என்றாலும் தீனதயாளன் வீட்டிலிருந்த ஊழியர்கள் குமார், மான்சிங், ராஜாமணி ஆகியோரை கைது செய்த போலீசார் வீடு முழுக்க சோதனை நடத்தினார்கள். அப்போது 55 பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் நேற்று மூன்றாவது நாளாகவும் தீனதயாளன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோர்ட்டு உத்தரவு பெற்று அவர் வீட்டில் உள்ள அறை கதவுகளை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அந்த அறைகளில் இருந்தும் சிலைகள், ஓவியங்கள் கிடைத்தன.
மூன்று நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 71 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 41 ஐம்பொன் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 75 அரிய வண்ண ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 112 சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்லா வகை சாமி சிலைகளும் உள்ளன. பெரும்பாலான சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
2 அம்மன் சிலைகள் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட இந்த சிலைகளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது 79 வயதாகும் தீனதயாளன் சாமி சிலை கடத்தல் தொழிலை நீண்ட நாட்களாக செய்து வந்துள்ளார். அவரை சரண் அடையும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்தனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
இதனால் தொழில் அதிபர் தீனதயாளன் எங்கும் தப்பிச் செல்ல முடியாதபடி முடக்கப்பட்டார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் பெங்களூர் சென்றனர்.
இந்த நிலையில் தீனதயாளன் நேற்றிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். வக்கீல்களுடன் சென்று அவர் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முன்பு சரண் அடைந்தார்.
தீனதயாளனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
சிலை கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த தீனதயாளன் பெங்களூரில் தலைமறைவாக இருந்தது தெரிந்தது. நேற்று இரவு 7.15 மணியளவில் அவர் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் சரண் அடைந்தார்.
தீனதயாளன் அவரது மகள் மற்றும் வக்கீலுடன் வந்து சரண் அடைந்தார். நேற்று இரவு அவரிடம் விசாரணை நடத்தினோம்.
இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வருமாறு அவரை இரவு வீட்டிற்கு அனுப்பினோம். அதனை ஏற்றுக் கொண்டு தீனதயாளன் இன்று காலை ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து விவரங்களும் பெறப்படுகின்றன. அவை வாக்குமூலமாக பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
சிலை கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது. வெளிநாடுகளுக்கு யார் மூலம் கடத்தப்பட்டது போன்ற விவரங்களும் முழுமையாக பெற மேல் விசாரணைக்காக தீனதயாளனை காவலில் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சரண் அடைந்த தீனதயாளன் பற்றி பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன. அவர் 1965-ம் ஆண்டு முதல் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி விற்கும் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இதன் மூலம் மிக பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்வார். இதனை பயன்படுத்தி சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவிலை உடைத்து நடராஜர் சிலை உள்ளிட்ட 13 சிலைகளை திருடியதாக தீனதயாளன் மீது வழக்கு உள்ளது.
2005-ம் ஆண்டில் நடந்த இந்த சிலை திருட்டு வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரித்து தீனதயாளனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
இந்த நிலையில் தீனதயாளன் பல கோடி மதிப்புள்ள சிலைகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். நெல்லை கோவில் சிலை திருட்டு வழக்கில் ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ள 112 சிலைகள் மற்றும் 75 வண்ண ஓவியங்கள், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி முடித்த பிறகு இந்த சாமி சிலைகள் கோர்ட்டில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
இந்த 112 சிலைகளையும் ஆய்வு செய்ய மத்திய தொல்லியியல் துறை அதிகாரிகள் நாளை மறுநாள் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள். அவர்கள் ஆய்வு செய்த பிறகு 112 சிலைகளின் பழமைச் சிறப்பு மற்றும் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்.
தொழில் அதிபர் தீனதயாளனின் சிலை கடத்தல் தொழிலுக்கு ஏராளமானவர்கள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.