சங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு ரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார்.
தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிக பணம் வசூலித்தாலும் அங்கு குழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனைத் தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையவில்லை.
இந்தநிலையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.1000 பரிசு வழங்கும் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுரேஷ் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் தலைமை ஆசிரியர் சுரேஷ் புதிய முயற்சி மேற்கொண்டார்.
அதாவது. கோடை விடுமுறையின்போது அந்த பகுதியில் உள்ள கிராமம் முழுவதும் வீதிவீதியாகச் சென்றார். கொடியனூர் பள்ளியில் புதிதாக மாணவனைச் சேர்த்தால் அந்த மாணவனுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது கிராமமக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்க்க தீர்மானித்தனர்.
கடந்த 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. திறந்த 2 நாட்களில் 10 மாணவர்கள் புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்தனர்.
ஒவ்வொரு மாணவனுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. வெளியூர் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் கொடியனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். கொடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் பரிசுத் திட்டம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.