100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி மின் கட்டணத்தில் சலுகை எப்படி கணக்கிடப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளார்.
100 யூனிட் மின்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று, முதல்–அமைச்சராக பதவியேற்ற அன்றே, வீட்டு மின்நுகர்வோர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது 5–ம் மாத மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
கட்டண விவரம்
எவ்வாறு கணக்கிட்டு கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:–
100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 91 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்கள் பயனடைகிறார்கள். ஏற்கனவே குடிசைகள் மற்றும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
பொதுவாக மின்கட்டணத்தை பொறுத்தவரையில் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.30–ம், 200 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ.3.50–ம், 201 முதல் 500 யூனிட் வரை ரூ.4.60 கட்டணமும், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சராசரி கணக்கீடு
100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டம் முதல்–அமைச்சர் கையெழுத்து போட்ட மே மாதம் 23–ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி ஜூலை 23–ந் தேதிக்கு பிறகு கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு முழுமையான 100 யூனிட் சலுகை கிடைக்கும். அதற்கு முன்பு பில் தொகை கணக்கெடுக்கப்படுபவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய மின்சாரம், அரசின் சலுகை அமல்படுத்தப்பட்ட தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மின் கட்டண சலுகை கிடைக்கும்.
சராசரியாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை 100 யூனிட் மின்சாரத்தின் கட்டணமான ரூ.175 தள்ளுபடி செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் வாரியத்திற்கு மாதம் ரூ.134 கோடி வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.1,608 கோடி கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசு வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஆணை தமிழக அரசிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
யார்? யாருக்கு எவ்வளவு தள்ளுபடி
உத்தேச மின்கட்டண பட்டியல்
யூனிட் மின்கட்டணம் தள்ளுபடி
ரூ. ரூ.
0 முதல் 100 130 130
0 முதல் 200 300 175
0 முதல் 300 700 200
0 முதல் 400 1,000 200
0 முதல் 500 1,300 200
0 முதல் 600 2,740 350

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.