கிழக்கு தாம்பரம் ஐயாசாமி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (63). ஆங்கில நாளிதழில் துணை தலைவர். இவரது மனைவி அலமேலு. இவர்களிடம் கார் டிரைவராக வேலை பார்ப்பவர் செல்வராஜா (39). பாஸ்கரின் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சி அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதற்கான பரிசு பொருட்கள் வாங்குவதற்கு நேற்று முன்தினம் மனைவியுடன் தி.நகர் சென்றார். அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டு, காரில் புறப்பட்டனர். இரவு 8.30 மணியளவில் குரோம்பேட்டைக்கு வந்தபோது ஒரு கடையின் அருகே பாஸ்கர், செல்வராஜாவிடம் நிறுத்தும்படி கூறினார். காரை நிறுத்தியதும், அருகில் உள்ள கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய சென்றார். பின்னர், அங்குள்ள கடைகளில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, காரின் அருகே வந்த 4 பேர், காரின் கதவை பதற்றத்துடன் தட்டி உள்ளனர். கண்ணாடியை இறக்கிய அலமேலுவிடம், ‘காரில் இருந்து இறங்கி சென்றவர், உங்களை அழைக்கிறார்’ என கூறியுள்ளனர்.
இதனால், திடுக்கிட்ட அலமேலும், அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி மயக்கம் வந்து இருக்கலாம். அதனால், உடனே சென்று அவரை அழைத்து வரும்படி டிரைவர் செல்வராஜாவிடம் கூறி உள்ளார். டிரைவரும் உடனே, கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று, ‘நீங்கள் அழைத்ததாக சில வாலிபர்கள் கூறினார்கள்’ என டிரைவர் கூறியுள்ளார். அதை கேட்ட பாஸ்கர், ‘நான் யாரையும் அனுப்பவில்லை. எதையும் சொல்லவில்லையே’ என கூறியுள்ளார். பின்னர், இருவரும் காருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையே, ‘‘காரின் கீழ் பகுதியில் 10 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடக்கின்றன. உங்களுடையதா’’ என காரில் இருந்த அலமேலுவிடம் அந்த வாலிபர்கள் கேட்டுள்ளனர். அதை கேட்ட அவர், கீழே இறங்கி பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் காரில் உட்கார்ந்துள்ளார்.
அந்த வாலிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். காரின் அருகே வந்த பாஸ்கர், ‘யார் உங்களிடம் நான் அழைத்ததாக கூறியது’ என கேட்டுள்ளார். அதற்கு ‘அவர்கள் சென்று விட்டார்கள்’ என அலமேலு கூறியபோது, தி.நகரில் பொருட்கள் வாங்கி வந்து காரில் வைத்திருந்த பையை காணாமல் பாஸ்கர் அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் 7 சவரன் நகை, ₹25 ஆயிரம், ஏடிஎம், கிரடிட் கார்டு, வாக்காளர் அடடை, ஆதார் அட்டை ஆகியவை இருந்துள்ளன. காரில் இருந்து பாஸ்கர் இறங்குவதை பார்த்து நோட்டமிட்ட மர்மநபர்கள், பாஸ்கர் அழைப்பதாக கூறி டிரைவரை அனுப்பிவிட்டு, தனியாக இருந்த அலமேலுவிடம் 10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நகை, பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, குரோம்பேட்டை போலீசில் பாஸ்கர் புகார் செய்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.