Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க 10 அதிரடி திட்டங்கள் அறிவிப்பு


சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க 10 அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க 10 அதிரடி திட்டங்கள் அறிவிப்பு
சென்னை:

சென்னையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது மோதலில் ஈடுபடுகிறார்கள். அரிவாள், உருட்டுகட்டையுடன் தாக்குதல் சம்பவம் நடக்கிறது.

பெண் பயணிகளை கிண்டல் செய்கிறார்கள். பொதுமக்களை தாக்குகிறார்கள். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீதும் தாக்குதல் நடக்கிறது. பொதுச்சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் தரப்பில் கூடுதல் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், அபய்குமார்சிங், வரதராஜூ போன்ற உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் ஊழியர்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

10 அதிரடி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

* பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பஸ்களை ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், பஸ்களின் கூரை மீது ஏறிநின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.

* கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டுவரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.

* கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளை கண்டிப்பாக சோதனை செய்யவேண்டும்.

* கல்லூரிகளின் நுழைவுவாயில், மாணவர்கள் விடுதி, கேண்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.

* கல்லூரிக்குள் முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.

* வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம்.

* மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* பஸ்சில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

* வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பலாம்.

* மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு அதிரடி திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள்.

பிற்பகலில் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.