Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

தி..மு.க.வில் இணைகிறது மக்கள் தே.மு.தி.க.! -ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


 மக்கள் தே.மு.தி.க., விரைவில் தி.மு.க.வில் இணைய உள்ளது. இதற்கான தீர்மானம் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியில் இருந்து வி.சி.சந்திரகுமார் தலைமையில் சிலர் பிரிந்து மக்கள் தே.மு.தி.க. என்ற புது கட்சியைத் தொடங்கினர். இதை தொடர்ந்து இவர்கள், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஈரோடு, மேட்டூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், மக்கள் தே.மு.தி.க.வின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தலைமையில் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் தே.மு.தி.க.வை தி.மு.க.வில் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது..

இதை தொடர்ந்து, மக்கள் தே.மு.தி.க. விரைவில் தி.மு.க.வுடன் இணையும் என்றும், தே.மு.தி.க.வில் இருந்து மேலும் பலரை தி.மு.க.வுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சி எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.