Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 25, 2016

தே.மு.தி.க., த.மா.கா. வெளியேறியதால் கவலை இல்லை... சொல்கிறார் வைகோ!


தே.மு.தி.க., த.மா.கா. கூட்டணியிலிருந்து வெளியேறியது பற்றி கவலை இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ''நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முடிவெடுத்ததை நான் தற்போது தவறு என கருதுகிறேன். அ.தி.மு.க.விடம் பணம் வாங்கிக் கொண்டு நான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட்டதாக பல கட்சியினர் என் மீது குற்றம் சுமத்தினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, பலமான கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி அமையும் வரை ஊடகங்கள் உருவேற்றின. ஆனால், கூட்டணி அமைந்த பின்னர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டன. அந்த இருட்டடிப்பும், தி.மு.க., அ.தி.மு.க.வினரின் பண விநியோகமும் ம.தி.மு.க. தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறியது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அது அவர்களது விருப்பம். மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவோம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.