கடந்த தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் சொன்னதை செய்தேன். சொல்லாத பலவற்றையும் செய்தேன். அதனால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள் என்று பெருந்துறை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா பேசும்போது, ''தந்தை பெரியார் பிறந்த மண்ணான இந்த ஈரோடு மாவட்ட மண்ணில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் நான் பெருமை கொள்கிறேன்.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ‘அறிஞர் அண்ணா உணவகம்’ அமைக்கப்படும் எனக் கூறி மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். ஒருவேளை உணவுக்கும் வழியின்றி இருக்கும் மக்களுக்கு தான் இந்த அறிஞர் அண்ணா உணவகம் அறிமுகப்படுத்தப்படுமாம்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இதர சமய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. அதாவது, திருக்கோவில்களில் தற்போது நடத்தப்பட்டு வரும் அன்னதானத்தை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக அந்த திட்டத்தின் கீழ் ஒரு வேளை உணவு வழங்க எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
அம்மா உணவகங்களில் ஏழை-எளியோருக்கு மிக குறைந்த விலையில் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் மூடப்பட்டு ஏழை-எளியோர்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட வேண்டும் என்பது தான் தி.மு.க.வினரின் குறிக்கோள். தி.மு.க.வினர் நடத்தி வரும் ஓட்டல்களின் வருமானம் அம்மா உணவகங்களால் பாதிக்கப்படுகிறதே என்பதால் தான் தி.மு.க.வினர் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.
தி.மு.க.வினரில் பலர் மினரல் வாட்டர் என்னும் குடிதண்ணீர் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதனால் தான் அம்மா குடிநீர் விற்பனை செய்வதற்கும் கருணாநிதியும், அவரது தனயனும் தி.மு.க.வினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முந்தைய தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வில் இருந்து ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும், இதுபோன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படும் என்றுகூட குறிப்பிடப்படவில்லை.
'மக்களால் நான் மக்களுக்காகவே நான்', என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தே நான் பணியாற்றி வருகிறேன். 'உங்களால் நான் உங்களுக்காகவே நான்' தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது ஒரு தாய்க்கு தான் தெரியும். அதனால் தான் உங்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து, யோசித்து, பார்த்து, பார்த்து இந்த தேர்தல் அறிக்கையை நான் தயாரித்திருக்கிறேன்.
இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 54 தலைப்புகளின் கீழ் நூற்றுக்கணக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தேன். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் சொன்னதை செய்தேன். சொல்லாதவற்றையும், பலவற்றை செய்தேன். உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியை கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியை கொடுக்கிறதோ, அது போல எனது ஆட்சி வசந்தத்தை கொடுத்திருக்கிறது
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள். 2ஜி விவகாரத்தில் தி.மு.க.வை காங்கிரஸ் பழிவாங்குவதாக கூறிய கருணாநிதி, தற்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன்? சமையல் எரிவாயுவிற்கான விலையை தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் உயர்த்தி வந்தது. இதை மாநில அரசால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு எரிவாவு சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தது தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு. பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தின் தவறான கொள்கையை தான் தற்போதைய பா.ஜ.க. அரசும் கடைபிடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் மத்திய கலால் வரியை உயர்த்தி விட்டது தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு.
பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்களின் விலை உயர்ந்தால், போக்குவரத்து செலவு அதிகமாகும். அதன் காரணமாக பொருட்களின் விலை உயரும். டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாய் 57 காசு எனவும், பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 77 காசு எனவும் மத்திய கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது.
பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் விற்பனை வரியை உயர்த்தி உள்ளன. ஆனால், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு விற்பனை வரியை உயர்த்தவே இல்லை. அதே போல டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்களை அ.தி.மு.க. அரசு உயர்த்தாமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக 1,556 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல் விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.
உரவிலையை ஏற்றியது தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு தான். இதற்கு மத்திய அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்தது தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் தான். ஆனால், இதில் மாநில அரசு என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு உரத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது.
திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்படுவதை தடுக்க முந்தைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சாயப்பட்டறைகள் மூடப்படுவது அ.தி.மு.க. ஆட்சியில் தடுத்து நிறுத்தப்பட்டது. புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறியுள்ளதாக தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.