Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

அய்யா, அம்மா வேண்டாம்... இந்த பையாவை பாருங்க! -சைடுல ஆட்டோ விடுறது யாருங்க?



தமிழகத்தின் மோசமான நிலைக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் காரணம். அதனால் இனி அய்யாவும், அம்மாவும் வேண்டாம் பையாவை பாருங்கள் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரசும், திராவிட கட்சிகளும் தொடர்ந்து இதுவரை ஆட்சி செய்துள்ளன. இவர்கள் ஆட்சி செய்து இத்தனை ஆண்டுகளாகியும், இன்றுவரை ஒவ்வொரு கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சுகாதாரம் சீர்கெட்டு கிடக்கிறது.

கிராமங்களில் மருத்துவமனை இருந்தாலும் அதில் பணியாற்ற மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் இருந்தால் செவிலியர் இல்லை. இவர்கள் இருந்தால் மருந்துகள் இல்லை. மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பள்ளிக்கூடம், வாழ்வாதாரம், எந்த நலத்திட்ட வசதிகளும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தின் இந்த மோசமான நிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. தான் காரணம். இதற்கு அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இதுவரை அய்யாவையும், அம்மாவையும் பார்த்து வந்துள்ளீர்கள். இனிமேல் தான் பையாவை (அண்ணனை, மோடி) பார்க்கப்போகிறீர்கள்.

தி.மு.க.வும். காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. ஓட்டுக்காக கூட்டணி வைப்பதும், தங்களது சொத்துக்களை பெருக்குவது மட்டுமே இவர்களின் முக்கிய நோக்கம். பிரதமர் மோடி ஆட்சியில் நான்கு வழிச்சாலை 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. சூரிய மின்சக்தி திட்டத்தை அதிகமாக செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மோடி உருவாக்கி உள்ளார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு திட்டங்கள் மூலமாக இந்தியாவை உலக அளவில் உயர்த்தி காட்டியவர் நரேந்திர மோடி. மற்ற கட்சிகள் போல் கமிஷனுக்காக திட்டம் போட்டு செயல்படுபவர்கள் நாங்கள் அல்ல. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜ.க.வால் மட்டுமே கொண்டுவர முடியும். பிரதமர் மோடியோடு இணக்கமாக, நட்புணர்வோடு, தோழமையோடு இருக்க வேண்டிய ஆட்சி தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான, முன்னேற்றத்திற்கான ஆட்சி வேண்டும் என்றால் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.