Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

யோகா மூலம் புற்றுநோய் குணமாகும்! மத்திய அமைச்சர் பேச்சு


யோகா செய்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
 கோவாவில் தேசிய மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில் மத்திய ஆயுஷ் மருத்துவத் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்துகொண்டு பேசியதாவது: ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவத்தை மாற்று மருத்துவ சிகிச்சையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுஷ் மருத்துவம் என்பது அலோபதிக்கு எதிரானது அல்ல.
 நோயாளிகளை குணப்படுத்துவதே அனைத்து மருத்துவ சிகிச்சை முறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற குறைபாடுகளை குணப்படுத்த வேண்டுமெனில் மருந்துகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும். ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி செய்வது குறித்து அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். யோகா மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முடிவில் நிரூபித்துள்ளது.
 ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறையின் சிறப்புகளை விளக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளதுபோல், அனைத்து மாநிலங்களிலும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீபாத் நாயக்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.