துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே, மேலக்கரந்தை விலக்கு பகுதியில், டயர் வெடித்து நின்றிருந்த மேக்சி கேப் வேன் மீது லாரி மோதியதில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர்; மூன்று பேர் காயமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் பகுதியில், சமீபத்தில் வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள, விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி பகுதியை சேர்ந்த, 25 பேர், மேக்சி கேப் வேனில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.
இரவு, 9:30 மணிக்கு, சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 10:30 மணிக்கு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
துாத்துக்குடி - -மதுரை நான்கு வழிச்சாலையில், மேலக்கரந்தை விலக்கு பகுதியில் வந்த போது வேனின் பின்புற டயர் வெடித்தது. டிரைவர், டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டார். சிலர், வேனின் முன்புறம், சாலையில் படுத்திருந்தனர்; சிலர், பின்புறம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, துாத்துக்குடி
யில் இருந்து நிலக்கரி ஏற்றி, அதிவேகமாக வந்த லாரி, வேனின் பின்புறமாக மோதியது. இதில், வேன் துாக்கி எறியப்பட்டது. அதன் முன் படுத்திருந்தவர்கள் மீது லாரி ஏறி, 100 மீட்டர் துாரம் சென்று நின்றது. இதில், 1 முதல், 40 வயது வரையிலான, ஒன்பது பேர் பலியாகினர்; மூன்று பேருக்குப் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். லாரி டிரைவர், மாசார்பட்டி போலீசில் சரணடைந்தார்.
இரவு நேரத்தில் பயணம்
இரவு நேரப் பயணம் தான், சடங்குக்கு சென்றவர்களின் உயிரைப் பறித்து விட்டது.
-சாலையில், இருட்டில் வேன் நின்று கொண்டிருந்த போது, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் லாரி டிரைவருக்கு, வேன் இருந்ததே தெரியவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.