Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

உலகில் வேகமாக அழிவை நோக்கி நகர்ந்து வரும் 10 இடங்கள்!



மனிதன் கால்பட்ட இடத்தில் புல்பூண்டு கூட முளைக்காது என்பது வெறும் கூற்று மட்டுமல்ல, உண்மையும் கூட. 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து நன்றாக இயங்கி வந்த உலகம். மனிதன் என்ற கொடிய இனம் பிறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி பயணிக்க துவங்கியது.

கடந்து ஒரு நூற்றாண்டில் தான் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் புரட்சி கண்டோம். இந்த புரட்சியின் காரணத்தால் மனித இனம் மட்டுமின்றி உலகில் எந்த பாவமும் அறியாத மற்ற உயிரினங்களும், தாவரங்களும் கூட அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.

இனி, உலகில் வேகமாக அழிவை நோக்கி நகர்ந்து வரும் பத்து இடங்கள் குறித்து காண்போம்…

ஸ்கை ஐலாண்ட்
நியூ மெக்சிகோ மற்றும் சிஹுவாஹன் அருகில் அரிசோனா எனும் பகுதியில் இருக்கிறது ஸ்கை ஐலாண்ட் எனும் இப்பகுதி. புவி வெப்பமையம் ஆதல் காரணத்தினால் மிக அழகான இடமாக திகழ்ந்து வந்த இந்த பகுதி இப்போது அழியும் தருவாயில் இருக்கிறது.

ஹிமாலயம்
ரெட் பாண்டா, ஸ்னோ லெப்பர்ட், பெங்கால் புலிகள், கங்கை டால்பின் போன்ற உயரினங்கள் வாழும் பகுதியான இமாயல மலைத்தொடர் வேகமாக உருகி வருகிறது. மரங்கள் அழிக்கப்பட்டதால் அதிகரித்த வெப்பம் தான் இதற்கான காரணமாகும்.

மடகாஸ்கர்
ஆப்ரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அழகிய தீவு மடகாஸ்கர். இந்த இடத்தில் 21 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்ததால், இப்போது வெறும் 15% இயற்கை வளங்கள் தான் இந்த தீவில் மிஞ்சி இருக்கிறது. பல அரிய உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தத்திற்குரியது.

க்லேஸியர் தேசிய பூங்கா
பெயருக்கு ஏற்ப மிகவும் எழில் மிகுமிடமாக திகழ்ந்து வந்தது இந்த இடம். 1850-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு க்லேஸியர் தான் மிஞ்சி இருக்கிறது. மற்றவை புவி வெப்பம் அதிகரித்ததன் காரணத்தால் உருகிவிட்டன.



தி கோரல் முக்கோணம்
உலகில் அழிந்து வரும் இடங்களில் முதன்மை இடங்களில் இன்றாக இவ்விடமும் அமைந்துள்ளது. மீன் பிடி தொழில் அடிப்படையாக கொண்ட இந்த இடமும் புவி வெப்பமடைதல் காரணமாக வேகமாக அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது.

அண்டார்டிகா
புவி வெப்பம் அதிகமாவதால் மிக வேகமாக அழிந்து வருகிறது அண்டார்டிகா. இங்கிருக்கும் பனி மலைகள் மற்றும் பெரிய பனிபாறைகள் அதிவேகமாக உருகி வருகின்றன. இதனால், பென்குயின்களும் கூட அதிக எண்ணிக்கையில் இறந்து வருகின்றன.

மைக்குரேனேசிய மற்றும் பொலினீசியா
சுற்றுலா பயணிகளை வெகுவாக இருக்கும் பகுதியாக அமைந்திருந்தது இந்த மைக்குரேனேசிய மற்றும் பொலினீசியா தீவுகள். ஆனால், புவி வெப்பமடைதல் காரணமாக ஒரு மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. இதன் காரணத்தால் மட்டும் நான்கு கிலோமீட்டர் சுற்றவளவு நீருக்குள் மூழ்கிவிட்டது.

மத்தியதரைக் கடல் பகுதி
மத்தியதரைக் கடல் பகுதியை சுற்றியுள்ள பல இடங்கள் புவி வெப்பமைடைதல் காரணத்தால் அழிந்து வருகிறது. கடந்த 8000 வருடங்களில் இல்லாத மாற்றங்கள் இப்போது இங்கு நிலவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இங்கு மரங்களும் அதிகளவில் வெட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிக்
கிட்டத்தட்ட இரட்டிப்பு மடங்கு தட்பவெப்ப நிலை ஆர்டிக் பகுதியில் அதிகரித்துள்ளது. இதன் காரணத்தால் பனி பாறைகள் அதிகளவில் உருகி வருகிறது. இங்கு வாழ்ந்து வரும் பனி கரடிகளும் அழிந்து வருகின்றன. மேலும், இதனால் உலகின் கடல் மட்ட அளவு அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

போர்னியோ
உலகின் மூன்றாவது பெரிய தீவாக இருந்து வருகிறது போர்னியோ. 15,000கும் அதிகமான தாவர வகைகள் மற்றும் அரிய உயிரினங்கள் வாழும் பகுதி தான் இந்த போர்னியோ. புவி வெப்பம் அடைதல் காரணமாக இதுவும் வேகமாக அழிவை நோக்கி பயணித்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.