நாங்கள்லாம் வீட்ல எவ்வளவு வேலை பார்க்கறோம் தெரியுமா?’ என்று பெருமை பொங்க சொல்லிக் கொள்ளும் எத்தனையோ ஆண்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘ஹலோ! அப்படியெல்லாம் பெருமைபட்டுக்காதீங்க! உலக அளவுல இந்திய ஆண்கள்தான் ரொம்ப குறைவா வீட்டு வேலை செய்யறவங்க’ என்று குட்டு வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வு. ‘ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோ-ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட்’ (OECD) என்ற அவ்வமைப்பின் ஆய்வுப்படி, இந்திய ஆண்கள் வீட்டு வேலைக்காக ஒதுக்கும் நிமிடங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 19 நிமிடங்களே!
ஓர் இந்தியப் பெண் சமையல் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீடு துடைப்பது என்று ஒரு நாளில் பல மணி நேரங்களை வீட்டுவேலைகளுக்காகச் செலவழிக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் அவருடைய கணவரோ, தந்தையோ, சகோதரரோ - ஹாயாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது அரட்டை அடிப்பதிலோ, பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுவதிலோ நேரம் கடத்துகிறார்.
இந்த ஆய்வுப் பட்டியலில் இந்திய ஆண்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்களே. ஒரு நாளைக்கு வீட்டு வேலைக்காக கொரியாவைச் சேர்ந்த ஆண்கள் ஒதுக்கும் நிமிடங்கள் 21... ஜப்பானியர் 24... சீனர் 48.
உலகிலேயே ஈடுபாட்டோடு அதிக நேரம் வீட்டு வேலை செய்பவர்கள் ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த ஆண்களே! இவர்கள் வீட்டு வேலைகளுக்கு ஒதுக்கும் சராசரி நிமிடங்கள் 114. ஸ்லோவேனியாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் டென்மார்க் மற்றும் ஈஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஆண்கள்.
இந்தியாவில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட யதார்த்தம். வேலைக்கே போனாலும் கூட மனைவிதான் வீட்டு வேலைகளையும் அதிகமாக தலையில் சுமக்க வேண்டும் என்பது நிர்ப்பந்தம். ‘சமைப்பது, துணி துவைப்பது போன்ற வழக்கமான வீட்டு வேலைகளுக்காக இந்தியப் பெண்கள் ஒதுக்கும் நேரம் ஒரு நாளைக்கு 298 நிமிடங்கள் (சுமார் 5 மணி நேரம்)’ என்று உறுதிப்படுத்துகிறது OECD புள்ளிவிவரம்.
ஓய்வு நேரமாக ஆண்களுக்குக் கிடைப்பது 283 நிமிடங்கள்... பெண்களுக்கோ 221 நிமிடங்கள்தான். இந்த நேரத்தில் டி.வி. பார்ப்பது, விளையாடுவது எல்லாம் அடங்கும். ஒரு சராசரி இந்திய ஆண் தனக்காக, தன் தேவைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஒதுக்கிக் கொள்ளும் நேரம் ஒரு நாளில் 703 நிமிடங்கள் (கிட்டத்தட்ட 11 மணி நேரம்). அந்த நேரத்தில் அவர்கள் ஈடுபடும் வேலைகள் தூங்குவது, சாப்பிடுவது, குடிப்பது போன்றவை. இப்படி ஆண் பழக்கப்படுவதற்கு அம்மாக்களும் ஒரு காரணம்... ஆண் குழந்தை என்றால், வீட்டு வேலைகளில் விரலைக் கூட அசைக்கவிடுவதில்லை பெரும்பாலான இந்தியப் பெண்கள். ஏனென்றால், ‘அவன் ஆம்பளைப் புள்ளை!’ இந்தியாவில் OECD, 1990ம் ஆண்டிலிருந்து இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும், 2010ம் ஆண்டு ‘இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ரிசர்ச் ஆன் வுமன்’ (ICRW) அமைப்பு நடத்திய ஆய்வும், இந்திய ஆண்கள் குறித்த புள்ளிவிவரத்தை உறுதிப்படுத்துகிறது. ‘வீட்டுப் பணிகளில் பெண்களுக்குச் சமமாகவோ அல்லது அதிகமாகவோ ஈடுபடும் ஆண்கள் 16 சதவிகிதம் மட்டுமே’ என்கிறது ICRW ஆய்வு. சிரத்தையோடு வீட்டு வேலைகளில் உதவ நினைக்கும் ஆண்கள் சிலருக்கோ, எப்படி உதவுவது என்று தெரிவதில்லை. ஒரு கப் டீ தயாரிக்கவோ, கேஸ் சிலிண்டரை மாற்றுவதற்கோ கூட அவர்களுக்கு சொல்லித் தரப்படுவதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வேறு காரணத்துக்காகவும் நல்ல வேலையை விட்டுப் போகிற பெண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், நோய்வாய்ப்பட்ட பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையை விட்டு விட்டுப் போகிற ஆண்களைப் பார்ப்பது அரிது.
வீட்டு வேலை செய்கிற ஆண்கள் குறைவு. அவர்களையும் ஊடகங்கள் சும்மா விட்டு வைப்பதில்லை. சமையல் செய்யும் அல்லது துணி துவைக்கும் ஓர் ஆணை கோமாளியாகக் காட்டுகின்றன மீடியாக்கள். சமீபகாலமாக, இந்தப் பாலினப் பாகுபாடு ஓரளவு மாறி வருகிறது. துவைப்பதில் கூட ஆணுக்கு பங்கு உண்டு என்பதை உணர்த்தும் விளம்பரப் படங்கள் கூட வர ஆரம்பித்திருக்கின்றன. வீட்டு வேலைகளில் பெண்களுக்குத் தோள் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் அதைத் தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே நம் விருப்பம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.