Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

மது பாட்டில் பறிமுதல்: ஆளுங்கட்சி எம்.எல்.சி., வீட்டுக்கு 'சீல்'


பீஹாரில், மது பாட்டில்கள் சிக்கியதையடுத்து, ஆளுங்கட்சியில் இருந்து சஸ்பெண்டான,
எம்.எல்.சி., மனோரமா தேவியின் வீட்டிற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், மனோரமா தேவி, எம்.எல்.சி., எனப்படும், சட்ட மேல்சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
அவரது மகன் ராக்கி யாதவ், 30, கயாவில், காரில், சென்றபோது, பின்னால் வந்த கார், அவரது காரை முந்திச் சென்றது. ஆத்திரமடைந்த ராக்கி, துப்பாக்கியால் சுட்டதில், ஆதித்ய சச்தேவ், 19, என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ராக்கி, அவரது தந்தை பின்டி யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆவணங்களை சேகரிப்பதற்காக, கயாவில் உள்ள, மனோரமா தேவியின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, மதுபான பாட்டில்கள் சிக்கின. பீஹாரில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அங்கு, மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; வீட்டிற்கும், 'சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து, மனோரமா தேவியை, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, 'சஸ்பெண்ட்' செய்தது; அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோதனையின் போது, ஒரு சிறுவன், அங்கு வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், மனோரமா தேவி மற்றும் அவரது கணவர் மீது, மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.