பெங்களூருவில் மொபைல் போனுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது மொபைல் போனை சோதனை செய்த கணவரின் விரலை வெட்டி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டில் இரவு உணவு தயாராகாததால் மனைவியிடம் காரணம் கேட்டுள்ளார். மனைவியோ, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. எப்போதும் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் சமைப்பதில்லை என குற்றம்சாட்டிய கணவர், மனைவியின் மொபைலை சோதனை செய்துள்ளார். அவரது மொபைலில் இருந்த எஸ்எம்எஸ்.,க்களையும் படித்துள்ளார்.
தனது மொபைலை கணவனிடம் இருந்த பறிக்க வந்த மனைவியும் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கணவனின் விரலை வெட்டி உள்ளார். தற்போது போலீசிடம் சென்றுள்ள இருவரும், தன்னை அடித்ததாக மனைவியும், கத்தியால் விரலை வெட்டியதாக கணவனும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். மனைவி மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பதே இந்த பிரச்னைக்கு காரணம் என கணவர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மொபைல் போனுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜெயந்தினி கூறுகையில், இது போன்ற உணர்ச்சி பூர்வமான சம்பவங்கள் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால் போதிய தூக்கமின்மை, இரவில் தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுவது, அதனால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவது, அதனால் ஏற்படும் பதற்றம், கோபம் இவையே இத்தகைய கொடூர சம்பவங்கள் நடக்கின்றன.
மொபைல் போனுக்கு அதிகம் அடிமையாவதால் குடும்ப உறவுகள், திருமண பந்தங்கள் அதிகம் சிதைக்கப்படுகின்றன. சில சமயம் விவாகரத்து, மனஅழுத்தம், மூர்க்கதனமாக நடந்து கொள்வது போன்றவை ஏற்படுகின்றன. சமீபத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மொபைல் போனுடனேயே அதிக நேரம் செலவிடுகிறார். தன்னுடனோ அல்லது குழந்தைகளுடனோ நேரம் செலவிடுவதில்லை. சாப்பிடும் போது கூட மொபைல் உடனேயே இருக்கிறார். இதனால் எனக்கு அவரிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என கேட்டுள்ளார்.
குறிப்பாக தற்போது இளம் வயதினர் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை அடிமை ஆவது என கூற முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் அதீத பயன்பாடும் இதற்கு முக்கிய காரணம். இது போன்ற பிரச்னைகளில் இருப்பவர்களுக்கு உதவி பல உதவி மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.