Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

சகாயத்தை திமுக,அதிமுகவுக்கு ஏன் பிடிக்கவில்லை?பரபரக்கிறார் சீமான்!


சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஏன் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான காரணம்  இதுதான் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சீமான், நாமக்கல் மாவட்டத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,

' ஐ.ஏ.அதிகாரி சகாயத்தை ஏன் திமுக அதிமுகவுக்கு பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்றார் திமுகவுக்கு பிடிக்கல. நெஞ்சை நிமிர்த்து என்றார் அதிமுகவுக்கு பிடிக்கல.அதனால் ரெண்டுபேருக்குமே பிடிக்காம போச்சு. இரண்டு கட்சியும் ஊழல் கூட்டம்.'கேங் ரூல்',  'குண்டாஸ் ரூல் ' மாதிரி ஆச்சு.மண்ணின் மக்களுக்கான ஆட்சியா இல்லை.மண்ணின் வளங்கள் களவு போகிறது. கேரளாவுல ஆற்று மணல் அல்ல முடியாது. மணல் அல்ல அங்கு தடை.ஆந்திராவிலும் அதே நிலைதான்.அதே போல கர்நாடகாவிலும் தடை இருக்கு. இங்கே ஆற்று மணல் அல்லவேண்டாம் என்று போராடினால் சிறையில் போடுகிறார்கள். இதுதான் தமிழ் நாட்டின் நிலை' என்று கூறினார்.      

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.