இயற்கை மழை, செயற்கை பிழை எனப் பெரும் பேரிடராகவும் அமைந்த டிசம்பர் மாத சென்னை மழை உண்டாக்கிய விளைவுகளால், சென்னைவாசிகள் அதிகம் அச்சப்படும் வார்த்தையாக 'மழை' ஆகிவிட்டது. வரலாற்றை ஒப்பிட்டு பார்த்தால் நேற்று இரவு பெய்ததது மெலிதான் தூறல்தான். ஆனால், அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடை வெயிலுக்கு நாம் இதமான மழை வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அப்படி மழை பெய்தால் அதை வரவேற்க தயாராக இருக்கிறோமா...?
தண்டனைகள் தவறுகளை உணர்வதற்கும், திருத்தி கொள்வதற்கும்தான். டிசம்பர் மழை அப்படிப்பட்ட தண்டனைதான். ஆனால், அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டது பூஜ்யம்தான். மீண்டும் மீண்டும் பூமியை மாசுபடுத்தி வருகிறோம். தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட கூவத்தை, மூன்று நாட்களில் மீண்டும் மாசாக்கினோம். கழிமுகங்களில் மாநகர கழிவுகள் மட்டுமே நிற்கிறது. இது எதைப் பற்றியும் கவலை இல்லாமல் நம் அன்றாட பணிகளில் மூழ்கிவிட்டோம்.
பெருமழைக்கான வாய்ப்பிருக்கிறது

தமிழகத்தின் வெதர்மேன் (Weatherman) என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளார் (கோடை மழை மகிழ வேண்டிய ஒன்று. ஆனால் அதையே எச்சரிக்கை என்று குறிப்பிட வேண்டி இருக்கிறது). அவர் தன் முகநூல் பக்கத்தில், 'மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். நகரத்தில் இப்போது மழை ஓய்ந்தது போல் இருந்தாலும், மீண்டும் மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மழையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

இத்தகைய சூழ்நிலையில் பேரிழப்புகளை உண்டாக்கிய சென்னை மழையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?அண்மையில் 'நீர்வழி' என்ற அமைப்பு, 2015 சென்னை பெருமழை குறித்த குடிமக்கள் சாசனத்தை வெளியிட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.