திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நமீதா அ.தி.மு.கவில் சேர்ந்தபோது, அவர் விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவரை பிரசாரத்துக்கு புக் செய்ய, அ.தி.மு.க வேட்பாளர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், ஸ்டார் பேச்சாளர்களில் அவர் பெயர் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இறுதிவரை நமீதாவும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்தோம்...
''அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது, நமீதாவின் விருப்பம். அவரை பிரசாரத்துக்கு அழைப்பது, தலைமைக் கழகத்தின் முடிவு. அங்கிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை, அதனால் செல்லவில்லை" என்றார் நமீதாவின் உதவியாளர்.
இது தொடர்பாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சமரசத்திடம் பேசினோம். ''நமீதாவை அழைப்பதா, வேண்டாமா என்பது தலைமைக் கழகத்தின் முடிவு. அடிப்படை உறுப்பினராகச் சேரும் பிரபலங்கள், பிரசாரத்துக்கு வரவேண்டும் என்பதில்லை'' என்றார்.
சில அ.தி.மு.க பிரமுகர்களிடம் விசாரித்தோம். ''சீரியஸான அரசியல் மேடையில் பேசும் அளவுக்கு நமீதாவுக்கு பக்குவம் இல்லை. மேலும், அவருக்குத் தமிழ் தெரியாது. எங்காவது எதையாவது பேசி மீம்ஸ், வீடியோ என்று கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது என்று அம்மா நிறுத்தியிருக்கலாம்" என்றார்கள்.
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து நமீதாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பு வராதது, நமீதா தரப்புக்கும் தொண்டர்கள் தரப்புக்கும் ஏமாற்றம்தான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.