அமுதனின் தாய் நாள்தோறும் இரவலர்க்கு உணவு அளித்த பிறகுதான் சாப்பிடுவாள்.
இதைக் கவனித்த அமுதன், ""அம்மா! நாமே வறுமையில் வாடுகிறோம். இந்த நிலையில் நாள்தோறும் இரவலர்க்கு உணவு அளிக்க வேண்டுமா? இதனால் நமக்கு என்ன நம்மை?'' என்று கேட்டான்.
""மகனே! ஐயமிட்டு உண் என்பது பெரியோர் மொழி. அதை நான் பின்பற்றி வருகிறேன். அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாது,'' என்றார் அமுதனின் தாய்.
""அம்மா! நான் அன்னதானத்தின் பலனைத் தெரிந்து கொண்டு வருகிறேன்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான்.
அடர்ந்த காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான் அவன். இருட்ட தொடங்கியது. கொடிய விலங்குகளின் குரல் கேட்டது. தன் உயிர் போகப் போகிறது என்று நடுங்கினான்.
அங்கே வந்த வேடன் ஒருவன் அவன் மீது இரக்கம் கொண்டான்.
""சிறுவனே! இரவில் இங்கே இருப்பது ஆபத்து. என்னுடன் பரணில் தங்கிவிட்டுக் காலையில் செல்,'' என்றான்.
பெரிய மரம் ஒன்றில் கட்டப்பட்டு இருந்த பரணிற்கு அவனை அழைத்துச் சென்றான்.
அங்கே இருந்த அவன் மனைவி சிறுவன் ஒருவனுடன் கணவன் வருவதைப் பார்த்தாள்.
""நம் இருவருக்கே இங்கே சாப்பிட உணவு இல்லை; தங்க இடமும் இல்லை; இந்த நிலையில் சிறுவன் ஒருவனை அழைத்து வரலாமா?'' என்று கோபத்துடன் கத்தினாள்.
""இவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. உன் உணவில் எதுவும் இவனுக்குத் தர வேண்டாம். உன் இடத்திலும் பங்கு தர வேண்டாம். என் சாப்பாட்டைத் தந்து பரணில் என் இடத்தில் படுக்க வைக்கிறேன்,'' என்றான் அவன்.
""ஏதாவது செய்யுங்கள்,'' என்று எரிச்சலுடன் சொன்னாள் அவள்.
தன் உணவில் ஒரு பகுதியை சிறுவனிடம் தந்தான் அவன். பரணில் உள்ளே சிறுவனைப் படுக்க வைத்து விட்டு, ஒட்டில் படுத்துக் கொண்டான்.
நள்ளிரவில் பரணில் இருந்து தவறி கீழே விழுந்தான் அவன். அங்கே உலாவிய விலங்குகள் அவனைக் கொன்று தின்றன.
காலையில் விழித்தாள் வேடுவச்சி. கணவன் இறந்ததை அறிந்து, அழுது புலம்பினாள்.
நடந்ததை அறிந்து வருத்தத்துடன் புறப்பட்டான் அமுதன். நீண்ட தொலைவு நடந்தான். தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரைப் பார்த்தார். அவரைப் பணிவாக வணங்கினான். அவரும் கண் திறந்து அவனைப் பார்த்தார்.
""அன்னதானத்தின் பலனைத் தெரிந்து கொள்ள வந்தேன். அதனால் என்ன பலன் கிடைக்கும்?'' என்று கேட்டான் அமுதன்.
""பக்கத்து நாட்டு அரசருக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது. அந்தக் குழந்தையிடம் அன்னதானத்தின் பலன் என்ன? என்று கேள். அது சொல்லும்,'' என்றார் முனிவர்.
அங்கிருந்து புறப்பட்ட அவன், பக்கத்து நாட்டை அடைந்தான். அரண்மனை சென்று அரசரை வணங்கினான்.
""அரசே! உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது. குழந்தை பிறந்ததும் அதை என்னிடம் எடுத்து வாருங்கள். அந்தக் குழந்தையிடம் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்,'' என்றான்.
""மகிழ்ச்சி அடைந்த அரசன், அப்படியே செய்கிறேன்,'' என்றான்.
அரண்மனையில் தங்கி இருந்தான் அவன். அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பச்சிளம் குழந்தையை அவன் முன் கொண்டு வந்து வைத்தனர்.
குழந்தையைப் பார்த்து அவன், ""இளவரசே! அன்னதானத்தின் பலனைச் சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.
குழந்தை வாய் திறந்து, ""சிறுவனே! காட்டில் உனக்கு உணவு அளித்த வேடன்தான் நான். உனக்கு உணவு அளித்த புண்ணியத்தால், இளவரசனாக பிறந்து உள்ளேன். நாள்தோறும் ஐயமிட்டு உண்கின்ற உன் தாய்க்கு என்ன பேறு கிடைக்கும்? நீயே கற்பனை செய்து பார்,'' என்று பதில் சொன்னது.
அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
வீடு திரும்பிய அவன் நடந்ததை எல்லாம் தன் தாயிடம் சொன்னான்.
""அம்மா! நாம் நாள்தோறும் இரவலர்க்கு உணவிட்ட பிறகே உண்போம்,'' என்றான்.
நாள்தோறும் அவர்கள் அந்த நல்ல வழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.
குட்டீஸ் நீங்களும் இந்த பழக்கத்தை கடைப்பிடிக்கலாமே!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.