Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

‛வெயிட்டிங்க் லிஸ்ட்' பயணிகளுக்கு மாற்று ரயில் திட்டம் அமல்



ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடம் ஒதுக்கும் ‛விகல்ப்' திட்டத்தை இந்திய ரயில்வே அமல்படுத்தியுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மும்பையில் இன்று துவக்கி வைத்தார்.

முதல்கட்டமாக புதுடில்லியிலிருந்து சென்னை, மும்பை, ஹவுரா, பெங்களூரு மற்றும் செகந்தராபாத் ஆகிய 5 முக்கிய வழிதடங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ரயில்களி்ல் முன்பதிவு செய்யும் பயணிகள் விகல்ப் திட்டத்தை விருப்பத்தின் பேரில் பயன்படுத்தலாம்.

இத்திட்டம் எக்ஸ்பிரஸ், மெயில் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜதானி, சதாப்தி, டொரோன்டோ ரயில்களில் இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது. மாற்று ரயில்களில் பயணிக்க எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.